இந்தியாசெய்திகள்

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

24 66095a5e368ce
Share

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை, அது தேவையில்லை. ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்தவர் இங்கு வரவில்லை என்று தான் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நான் எப்போதும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை ஒழிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும். உங்கள் வாக்குகளை எனக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள். கடந்த ஆண்டுகளில் பாஜக ஆட்சி ஊழல் செய்யாமல் உள்ளது” என்றார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...