நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மின்சக்தி அமைச்சர்,
நின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் அடுத்த வரமளவில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து தேவையான எரிபொருளை நேரடியாக கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு இன்றும் நாளையும் தேவையான எரிபொருள் இருப்பைப்
லங்கா ஐஓசியிடம் இருந்து கொள்வனவு செய்யஎதிர்பார்த்துள்ளோம் – என்றார்.
#SriLankaNews