16 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே இயங்கும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இன்று (17) தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், புதன்கிழமைகளில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தனியார் துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கை வர்த்தகச் சபை மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயலுமானவரை தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்து பணியாற்றும்’ (Work-from-home) வசதிகளை வழங்குவதன் மூலம், வீதிகளில் போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் தேவையையும் பெருமளவு குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“பொதுப் போக்குவரத்துச் சேவைகள் குறைக்கப்படுவதால், பொதுமக்கள் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளுக்குச் செல்லுதல் போன்ற அவசர மருத்துவத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என சந்திரகீர்த்தி வலியுறுத்தினார்.

புதன்கிழமைகளில் மக்களின் நடமாட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், வரையறுக்கப்பட்ட அளவில் இயங்கும் பேருந்து மற்றும் இரயில் சேவைகள் தேவையற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் மூலம் நாட்டின் எரிபொருள் கையிருப்பைத் திறம்பட முகாமைத்துவம் செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...