மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்துச் சேவை இன்று ஆரம்பமானது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுப் போக்குவரத்துச் சேவை இன்று ஆரம்பமானது.
இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பேருந்து சேவை இடம்பெற்றது.
நுவரெலியா – கொழும்பு, பதுளை – கொழும்பு, கம்பளை – கொழும்பு, பூண்டுலோயா – கொழும்பு, கண்டி – பதுளை, ஹட்டன் – இரத்தினபுரி உட்பட பல பகுதிகளுக்கான பேருந்து சேவைகள் இடம்பெற்றன.
இந்தநிலையில் பொதுப் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றுமாறு சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுகாதார நடைமுறையை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் முடக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
#SrilankaNews