முல்லையில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

32536916 2133321930219686 5398166161789550592 n

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை  வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசனின்  ஒழுங்குபடுத்தலில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கனடாவில் வசிக்கும் லக்ஸ்மன் ஸ்ரீ கல்யாணி தம்பதிகளின் புதல்வன் ஆதிரனின் பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாவகச்சேரி  நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், வன்னி மேம்பாட்டுப் பேரவையின் அமைப்பாளர் இ.தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டு உதவிப் பொருட்களை  வழங்கி வைத்தனர்.

#SriLankaNews

Exit mobile version