வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வரவேண்டும் வரவேண்டும் ஐநா அமைதிப்படை வரவேண்டும்., வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமை நாம் அழுவது கேட்கவில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும்., தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்., எங்கே எங்கே உறவுகள் எங்கே? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220307 102934

#SriLankaNews

Exit mobile version