செய்திகள்

வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம்!

20230519 094930 scaled
Share
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரினால்  வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டதோடு ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்களுடன்   தொடர்புடைய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
அத்தோடு ஊழல்வாதியை ஜனாதிபதி  பதவி நீக்கம் செய்ய  வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்,
 முன்னாள வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவிற்கு அதராவன சிலரே இந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதாக பொலிசாருக்கு  கிடைத்த புலனாய்வு  தகவலின் வும்அ டிப்படையில் இன்று காலையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்திற்கு  பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த போராட்டத்தில் 6  பேர் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
20230519 094933 20230519 094809 20230519 094900
#srilankaNews
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...