ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்குழு உறுப்பினராக (Working Committee Member) பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்ட பேராசிரியர் சரித ஹேரத், அக்கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார்.
கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் இந்த நியமனத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
பேராசிரியர் சரித ஹேரத்தின் அரசியல் அனுபவம் மற்றும் கல்விப் புலமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த விசேட நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் எதிர்காலக் கொள்கை வகுப்பிலும், அரசியல் நகர்வுகளிலும் சரித ஹேரத் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.