வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

WhatsApp Image 2021 12 07 at 10.12.29 PM

உலக மண் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகம் இணைந்து நடாத்திய பொது அறிவுப் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வித் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பயன்தரு மரக்கன்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நூல்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வடக்கு மாகாண விவசாய பிரதிக் கல்விப் பணிப்பாளர்,  சுற்றுச் சூழல் கழகத் தலைவர் எல். கேதீஸ்வரன், செயலாளர் மனோகரன் சசிகரன் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version