பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டிற்குள் கொண்டுவரப்படவுள்ளது!!

Pakistan Death

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version