தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல் ! – சங்கானையில் சம்பவம்

attack 2 720x375 1

யாழ் – காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சாரதி ஒருவரின் ஒழுங்கீனம் காரணமாக அவரை மேற்படி தனியார் பேருந்து சங்கம் சேவையில் இருந்து இடைநிறுத்தியது எனவும் அதன் பின்னணியிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

 

Exit mobile version