தென்அமெரிக்கா-ஈகுவடாரில் சிறைக் கலவரம் காரணமாக 24 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறைச்சாலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
‘லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகளுக்கிடையிலேயே குறித்த மோதல் உருவாகியிருந்தது.
கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் துப்பாக்கி சூடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்ககுதல் நடத்தியுள்ளனர்.
பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகே கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது.
இருந்த போதிலும் இந்த கலவரத்தில் 24 கைதிகள் கொல்லப்பட்டதோடு 48 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment