‘நட்சத்திர ஒளியும், கிறிஸ்துவின் பிறப்பும், உலகை உயிர்ப்பிக்கும்’ என்னும் தொனிபொருளில் அமைந்த நத்தார் பண்டிகை இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் மக்களுக்கு சிறப்பானதாக அமைய தன்னுடைய வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் அடித்தளமான அன்பையும் அமைதியையும் இப்பூவுலகில் விட்டுச் சென்றவர் இயேசு கிறிஸ்து.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சரியான முறையில் உணர்ந்து தங்களுடைய வாழ்க்கையை அவர் வழியிலேயே அமைத்துக் கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரினதும் கடமையாகும்.
நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் கொவிட் தொற்றுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்துள்ள உலகை புத்துயிர் பெற செய்வது உங்களுடைய பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews