விலைவாசி உயர்வைத் தடுக்கவே முடியாது! – பஸில் திட்டவட்டம்

Basil Rajapaksa 1

“ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.”

– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடும்.

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் விலை அதிகரிப்பைத் தடுக்க முடியாது.

நாட்டு மக்களுக்குத் தற்போதும் நாம் நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். நெருக்கடி நிலைமை எப்போது தீரும் என உறுதியாகக் கூறமுடியாது.

ஏனெனில் உலக விவகாரங்கள்கூட உள்நாட்டு விடயத்தில் தாக்கம் செலுத்தும். எது எப்படி இருந்தாலும் தேசிய பிரச்சினைகளை நாம் நிச்சயம் தீர்ப்போம்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version