பால்மாவுக்கான புதிய விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் அரசாங்கத்தால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தால் பால்மா விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், ஒரு கிலோகிராம் பால்மா விலையை 250 ரூபாவாலும், 400 கிராம் பால்மா விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.