சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதியால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.
சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவார் என பல தரப்பினரும் தகவல்கள் வெளியிட்டுவந்தனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடமும் கோரிக்கைகள் முன்வைத்தனர்.
எனினும், நேற்று சிறைக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டபோதிலும், அந்தப்பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.
அதேவேளை, எதிர்வரும் வெசாக் தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews

