வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இதேவேளை, சீனா, மீனவர்களுக்கு உதவி வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினோபார்ம் ஊசியையும் பெற்றிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
#SriLankaNews