யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜெ.பி பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னாண்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பி.எம்.சி.ஜெ.பி பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews

