இலங்கைக்கு பாராட்டு!!!

World Health Organisation

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த சனிக்கிழமை அளவில் நாட்டு மக்களில் ஒரு கோடி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தடுப்பூசி ஏற்றும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் வரையில் 2 கோடி 48 லட்சத்து 3 ஆயிரத்து 998 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இரண்டு கோடி பத்து லட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version