மாட்டுவண்டியில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள்

20210408223120 IMG 4885 1

எரிபொருள் பற்றாக்குறையைக் கண்டித்து முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மாதாந்த சபை அமர்வுக்கு இன்று மாட்டுவண்டிகளில் சென்றனர்.

முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் முன்றலில் இருந்து இவ்வாறு சபை உறுப்பினர்கள் மூன்று மாட்டுவண்டிகளில் சபை அமர்வுக்குப் புறப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.விஜிந்தன், உப தவிசாளர் ம.தொம்மைப்பிள்ளை, உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், தி.இரவீந்திரன், இ.கவாஸ்கர், க.தவராசா, இ.கஜீதரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான இ.ஜெகதீசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான த.அமலன், மோ.விக்கினா ஆகியோர் இவ்வாறு மாட்டுவண்டிகளில் சபை அமர்வுக்குச் சென்றனர்.

#SriLankaNews

Exit mobile version