நியூஸிலாந்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் பாதி தூரத்தில் அமைந்துள்ள மக்வாரி தீவுக்கு அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலநடுக்கத்தின் அளவு ரிச்டெர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அத்தோடு சேத நிலவரம் குறித்து இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை.
#world
Leave a comment