மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலஅதிர்வு 6.5 மெக்னிடியூட் ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு கெரேரோ மாநிலத்தின் சான் மார்கோஸ் (San Marcos) நகருக்கு அருகாமையிலும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகாபுல்கோவிற்கு (Acapulco) அருகிலும் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதங்களோ அல்லது பாரிய சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நிலஅதிர்வைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்த போதிலும், நிலைமை தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.