நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் 9.30 வரை 4 கட்டங்களாக இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது எனவும், இது தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது எனவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 25 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிவராதென மின்சக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
#SriLankaNews