ரிட் மனுவால் பிற்போடப்பட்ட விசாரணை

1589801840 1589784758 Court L

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை காணாமலாக்கிய சம்பவத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

ரிட் மனு எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. எனவே ரிட் மனுவின் தீர்பு வரும் வரையில் இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது பிற்போடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தில் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

 

Exit mobile version