3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இளைஞன் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளையடுத்து சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
#SrilankaNews