ஆபாச வீடியோ – பொலிஸார் எச்சரிக்கை !!

gyyyhj

ஆபாச வீடியோ – பொலிஸார் எச்சரிக்கை !!

ஆபாச வீடியோக்களை வைத்திருத்தல் மற்றும் பதிவேற்றுதல் இலங்கை சட்டத்தின்படி மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்,

பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவுசெய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்,

குறித்த ஆபாச வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைககளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்துகொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் – என்றுள்ளார்.

Exit mobile version