பொலன்னறுவை மாவட்டத்தை சிறிசேன குடும்பம் ஆக்கிரமித்துள்ளது என்று முன்னாள் ஆளுநரும், மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர்தான் மைத்திரிபால சிறிசேன. ஆனால் இன்று அவர் என்ன செய்கின்றார்? பொலன்னறுவை மாவட்டத்தை தனது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் பொருளாதார மற்றும் அரசியல் பலம் மைத்திரிபால சிறிசேன குடும்ப வசம்தான் உள்ளது. நாம் முன்னேறிவருவதற்கு முற்பட்டால் தடுத்து நிறுத்தப்படுவோம்.
நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருந்தேன். திட்டமிட்ட அடிப்படையில் தடுக்கப்பட்டேன். அடுத்து தனது மகனை மைத்திரி நாடாளுமன்றம் கொண்டுவருவார். கட்சி தலைமைப்பதவியை அவரிடம் ஒப்படைப்பார். அதன்பின்னர் தயாசறி போன்றவர்களுக்கும் ஆப்பு காத்திருக்கின்றது. ” – என்றார்.
#SriLankaNews