21 6134e432873c6
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை சர்ச்சை: முதுகெழும்பில்லாத அரசாங்கம்! – கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசம்!

Share

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இன்று (நவம்பர் 18) திருகோணமலைக்கு விஜயம் செய்து, ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் மீது விமர்சனம்: தற்போதைய அரசாங்கத்தை “முதுகெழும்பில்லாத அரசாங்கம்” என அவர் விமர்சித்துள்ளார்.

காசியப்ப தேரர் மீதான தாக்குதலின் காணொளியைக் கண்டு தாம் ஆவேசமடைந்ததேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான குறித்த விகாரைக்கான வரலாறு சுனாமிக்கு (2004) முதலே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...

14 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த உயர்மட்டக் குழு ஆலோசனை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும்...

17 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படும் என்ற தகவலை நிராகரித்தது எரிசக்தி அமைச்சு!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும்...

16 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் குறித்து எச்சரிக்கை: ஆயுர்வேத மருத்துவ சபை அறிக்கை!

ஆயுர்வேத மருத்துவ சபையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில்...