கொள்கை விளக்க உரை! – விவாதம் கோருகிறது ஐ.ம.ச

Samagi Jana Balawegaya Mobile

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் அது தொடர்பில் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version