மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத 505 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் மேல் மாகாணத்தில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாத 318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று நண்பகல் 12 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை 451 பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#SriLankaNews