மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொலியை பதிவிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தற்போது இந்த சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் காதுகளுக்கு சென்றடையும். – என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதல் இடம்பெற்றமைக்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவரவில்லை.
#SriLankaNews