பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா திருப்பதி கோவிலுக்கு விஜயம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவ்விஜயம் தொடர்பில் தரிது அமில உடுவரகெதரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைக் கருத்திற் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் முறைப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.
#SriLankaNews

