உலங்குவானூர்தி விபத்தில் உயிர் நீத்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திமோடி அஞ்சலி செலுத்தினார்.
குன்னூர் வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 13 பேரின் உடல்கள் மதியம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விமானம் மூலம் டில்லி பாலம் விமான நிலையத்துக்கு இரவு கொண்டு செல்லப்பட்ட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைகளின் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
#IndiaNews
Leave a comment