மொட்டில் களமிறங்கும் பிள்ளையான்!!

pillaiyan

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது.

மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறப்பார் எனவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பிள்ளையான் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனிடம் வினவியபோது,

” கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு பிள்ளையான் ஒத்திசைவார்.” என்று குறிப்பிட்டார். அதாவது கட்சி பச்சைக்கொடி காட்டினால் பிள்ளையான் களமிறங்குவார் என்பதே அவரின் கருத்தின் சுருக்கம்.

கடந்த பொதுத்தேர்தலில் பிள்ளையானின் கட்சி தனித்து போட்டியிட்டது. எனவே, பிள்ளையான் பதவி துறந்தாலும் அவரின் கட்சியை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் செல்லக்கூடும்.

2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version