போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இதன்போதே குறித்த 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் மோப்ப நாயான ஸ்டுவட்டின் ஒத்துழைப்புடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 10 மில்லிகிராம் ஹெரோயின், கேளர கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,
கைதானவர்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், ராகம, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Leave a comment