அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது!

rohitha

அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சொந்த மாவட்டமாகிய அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பெருந்தொகையான பைஸர் கொவிட் தடுப்பூசியை வழங்கியதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.

இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டுக்குத் தடுப்பூசி கொண்டுவர முடியாது என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால் தடுப்பூசி கொண்டுவந்தோம்.

சரியான முறையில் அது வழங்கப்படவில்லை என்றபோது அதனை சரியாக இப்போது செய்துவருகின்றோம்.

இன்றுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று பல்வேறு இடங்களுக்கு தடுப்பூசியை வழங்குகிறோம் என எதிர்கட்சியினர் குறைகூறுகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் இடைவிலகுகின்றனர் என விமர்சனம் உள்ளது.

அரசாங்கம், அனைத்தையும் ஒன்றிணைத்து செயற்படும் சந்தர்ப்பத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களில் சிலருக்கு விருப்பம் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஏகமனதாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களையே நாம் செயற்படுத்துகின்றோம் – என்றார்.

Exit mobile version