யாழில் பாடசாலை மாணவர்களுக்கு செவ்வாயன்று பைஸர்

pfizer vaccine

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் , திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமையும் மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபை எல்லை பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 11 மற்றும் தரம் 12 மாணவர்கள் தத்தமது பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு, உரிய நேரத்தை முற்காட்டியே பதிவுசெய்து கொள்வதுடன் , 18 வயதிற்கு குறைந்த மாணவ்ர்களை தமது பெற்றோரின் சம்மதம் வழங்கும் விண்ணப்பத்தை தமது பாடசாலை அதிபரிடம் பெற்று , அதனை பூர்த்திசெய்து சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை இடைவிலகியவர்களுக்கான தடுப்பூசி எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, 22.10.2001 – 21.10.2005 வரை பிறந்தவர்களில், பாடசாலையிலிருந்து இடைவிலகியோர் எதிர்வரும் சனிக்கிழமை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற வருவோர் தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு சான்றிதழின் பிரதியுடன் சமுகமளிக்க வேண்டும் எனவும் , 18 வயதை பூர்த்தி செய்யாதவர்கள் தமது பெற்றோர்களுடன் சமுகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version