இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும் இதுவரை எரிபொருள் இருப்பு கிடைக்கப்பெறவில்லை என்றும் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் இருப்பு விரைவில் கிடைக்கப்பெற்றால் மின்சார சபையினால் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என்றும் அன்ட்ரூ நவமணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
#srilankanews