கெரவலப்பிட்டிய யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்திற்கும், எரிவாயு விநியோக ஏகபோகத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews