வல்வெட்டித்துறையில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி

maaverar naal

யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது என பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக சபை அமர்வு கூட்டப்பட்டிருந்தது.

சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி பயன்படுத்துவதாயின் பொலிஸாரின் அனுமதியை பெற்று, பூங்கா கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நினைவேந்தலை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version