30 ஆண்டுகால சிறைவாசத்தின் பின் பேரறிவாளனுக்குப் பிணை!

1646819066170932

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்கு சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தற்காலிக விடுப்பில் இருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியைக் கருத்தில்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#IndianNews

Exit mobile version