இடுகாட்டுக்கு செல்வதற்கான பாதையின்மையால் சடலத்தை வயல்வெளிகளின் ஊடாக சுமந்துச் செல்லும் அவலம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்கிறது.
குறித்த அவலம் கமுதி அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்திலேயே நிலவுகின்றது. சுமார் 500 இற்கு மேற்பட்ட விவசாய கூலிகள் வசிக்கும் இப்பிரதேசத்தில் இடுகாட்டுக்கான பாதை வசதி ஏதும் இல்லை.
ஆகவே, சடலங்களை வயல்வெளிகளில் சகதிகள், சேறுகள் வழியாகவே இன்னல்களுக்கு மத்தியில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
#IndiaNews
Leave a comment