மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள்!!

kerosene stove

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது.

இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது. கடந்த ஒரிரு நாட்களில் மாத்திரம் அதிகளவான அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணெய் கொள்வனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விறகு வியாபாரிகளின் வர்த்தகமும் களைகட்டியுள்ளது. அதேவேளை, மண்பாண்டங்களை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Exit mobile version