” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
” நாட்டிலே எரிவாயுவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை என மீண்டும் வரிசை யுகம் ஆரம்பமாகியுள்ளது. புதிதாக மண்ணெண்னை வாங்குவதற்கும் மக்கள் தற்போது வரிசையில் நிற்கின்றனர்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டைவிட்டு வெளியேற, இளைஞர், யுவதிகள் கடவுச்சீட்டை வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். வாழ்வதற்கு வழியில்லாததாலேயே அவர்கள் வெளியேறுகின்றனர்.
மக்களை வாழ வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews