கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. படகுப் பாதையை கடலுக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் (Backhoe) இயந்திரம் தடம்புரண்டு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் நேற்று (ஒக் 27) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதையை கடலுக்குள் இறக்குவதற்காகப் பொக்லைன் இயந்திரம் முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து இந்தப் புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைத்தமையும் இந்த நிகழ்வின்போது பதிவாகியுள்ளது.

