வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது.
இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகையில்,
புதிய கொரோனா ஒமிக்ரோன் பரவல் காரணமாக மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
பி.சி.ஆர் பரிசோதனையின் முக்கியத்துவம் கருதி கொவிட் – 19 தொடர்பான விசேட நிபுணர்கள் குழு பரிசோதனைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews