நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றையதினம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் வீதிகளில் தேவையற்று நடமாடுவோர், முகக்கவசமின்றி பயணிப்போர் ஆகியோருக்கே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
#SriLankaNews