தவிசாளரின் வாக்கினால் நிறைவேற்றப்பட்டது – வேலணை பிரதேச சபை பாதீடு!!

304e9a9b a1f6 4383 bf20 c6c2a1993fa5

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் வழங்கிய ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்று(03) தவிசாளர் ந.கருணாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

பாதீட்டிற்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

பாதீட்டிற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைவாக தவிசாளர் தனது மேலதிக வாக்கினை ஆதரவாக வழங்க ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version