ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துகளால் அரச பங்காளிக்கட்சிகள், மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் அண்மைக்காலமாக கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது. முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிகளுக்கு மொட்டு கட்சி அறிவிப்பு விடுத்துவிட்டது. மறுபுறத்தில் பங்காளிகளும் மொட்டு கட்சிமீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச,
” நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் பயணித்த கட்சிகளை ஓரங்கட்டக்கூடாது. பங்காளிக்கட்சிகள் என்பவை கைப்பாவைகள் அல்ல. எனவே, கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய பிரதான பொறுப்பு தலைமைக்கட்சிக்கே இருக்கின்றது.” – என்று சுட்டிக்காட்டினார்.
பிரமரின் இந்த அறிவிப்பால் பங்காளிக்கட்சி தலைவர்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர்.
#SriLankaNews