2023 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, இரண்டரை வருடங்கள் செல்லும்வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
2020 ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. 2023 பெப்ரவரியாகும்போது இரண்டரை வருடங்கள் நிறைவடைகின்றது. அதன்பின்னர் எந்நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படலாம்.
இதன் பிரகாரமே மார்ச்சில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews